Commercial bank chat plugin
Your browser is out-of-date!

Update your browser to view this website correctly. Outdated Browser

For online banking click here.

×

Commercial bank contactCommercial bank mailCommercial bank branches/atmsCommercial bank calculators

09-07-2026 News & Events

FinanceAsia விருதுகளில் இலங்கை வங்கியொன்றின் மிகப்பெரிய வெற்றியுடன் கொமர்ஷல் வங்கி சரித்திரம் படைத்துள்ளது


இலங்கையின் வங்கித் துறையில் தனது நிகரற்ற தலைமைத்துவத்தையும் சிறப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான FinanceAsia விருதுகளில் கொமர்ஷல் வங்கி தொடர்ச்சியாக 15 ஆவது ஆண்டாகவும் 'இலங்கையின் சிறந்த வங்கி' (Best Bank in Sri Lanka) என்ற மகுடத்தை சூடியுள்ளதுடன், வங்கித் துறையின் முக்கிய பிரிவுகளில் ஏனைய ஆறு உயரிய விருதுகளையும் வென்றுள்ளது. இது இலங்கை வங்கியொன்று பெற்றுக்கொண்ட அதிகூடிய விருதுகளாகும்.

நாட்டின் சிறந்த வங்கியாக மகுடஞ் சூட்டப்பட்டமைக்கு மேலதிகமாக, கொமர்ஷல் வங்கியானது பின்வரும் விருதுகளையும் தனதாக்கியுள்ளது: சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கான சிறந்த வங்கி (Best Bank for SMEs)> தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கான சிறந்த வங்கி (Best Bank for Use of Technology)> சிறந்த இஸ்லாமிய நிதி நிறுவனம் (Best Islamic Finance House)> சிறந்த நிலைபெறுதகு வங்கி (Best Sustainable Bank)> சிறந்த தனியார் வங்கி (Best Private Bank)> இலங்கையின் சிறந்த சில்லறை வங்கி (Best Retail Bank in Sri Lanka). கூட்டாக நோக்கும் போது, இந்த விருதுகள் நிதிச் சேவைகள் துறையின் முக்கிய பிரிவுகளில் வங்கியின் தலைமைத்துவத்தை மேலும் வலுவாகப் பறைசாற்றுகின்றன.

“FinanceAsia விருதுகள் போன்ற உலகளாவிய ரீதியில் மதிக்கப்படும் விருதுத் திட்டங்களில் கிடைக்கப்பெறும் அங்கீகாரமானது, முன்னணி பிராந்திய மற்றும் சர்வதேச போட்டியாளர்களிடையே எமது நற்பெயரை மேலும் வலுப்படுத்துவதுடன், நிதியியல் வலிமை, புத்தாக்கம், வாடிக்கையாளர் சேவை மற்றும் நிலைபெறுதகு தன்மை ஆகியவற்றில் எமது சிறந்த செயற்பாட்டையும் உறுதிப்படுத்துகின்றது' என கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க தெரிவித்தார். 'இந்த வெற்றியானது பங்குதாரர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதோடு, வங்கித் துறையின் பல பிரிவுகளிலும் தொடர்ச்சியாக சிறந்த பெறுமதியை வழங்குவதில் எமது வங்கியின் ஆற்றல் மீதான வாடிக்கையாளர்களின் அதியுயர்ந்த நம்பிக்கையையும் மேலும் பலப்படுத்துகின்றது' எனவும் அவர் குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி ஹொங்கொங்கில் நடைபெற்ற கோலாகலமான விருது வழங்கும் விழாவில் கொமர்ஷல் வங்கியின் சார்பாக வங்கியின் சேவைகள் பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் திரு. ஷிந்தக தர்மசேன மற்றும் தகவல் தொழில்நுட்பம் (செயற்பாடுகள்) பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் திரு. கிரிஷான் கமகே ஆகியோர் இந்த விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் 270ற்கும் மேற்பட்ட தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 21 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance PLC மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

பட விளக்கம்:

கொமர்ஷல் வங்கியின் சார்பாக FinanceAsia விருதுகளை வங்கியின் தகவல் தொழில்நுட்பம் (செயற்பாடுகள்) பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் திரு. கிரிஷான் கமகே மற்றும் சேவைகள் பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் திரு. ஷிந்தக தர்மசேன ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர்.

How can we help?

If you`d like more help & information, you can:

Rate us

Your feedback

Visit us in

Your local branch

Call us to

Talk to an Advisor

Accessibility Options

Navigation

  • Highlight Links
  • Read Page

Content

  • Bigger Text
  • Bigger Cursor
  • Readable Font

Colors

  • Invert Colors
  • Brightness
  • Contrast
  • Grayscale
  • Dark / Light